முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றைய தினம் அனைத்து எதிர்க்கட்சிகளின் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
நாடு இருண்ட யுகத்துக்குள் சென்றுள்ளதாகவும் சர்வாதிகார பிடியிலிருந்து மீட்டு நாட்டை ஜனநாயக வழிமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ருவன் விஜேவர்தனவும் சமகி ஜனபல வேகய சார்பில் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment