ஹிஜாஸ் தடுத்து வைப்புக்கு எதிராக புத்திஜீவிகள் அறிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 14 July 2021

ஹிஜாஸ் தடுத்து வைப்புக்கு எதிராக புத்திஜீவிகள் அறிக்கை

 


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அஹ்னாப் ஜெசீம் தடுத்து வைப்புக்கு எதிராக 96 புத்தி ஜீவிகள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.


பெரும்பான்மை வாத அரசியல் பல தசாப்தங்களாக இந்நாட்டில் வன்முறையையே விளைவாகத் தந்திருப்பதாகவும் ஹிஜாஸ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவரது மாத்திரமன்றி சட்டத்தரணிகளதும் உரிமை மீறல் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கொரோனா சூழ்நிலையிலும் அரசாங்கம் முஸ்லிம் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தத் தவறாத அரசாங்கம் இதனூடாக அரசியல் இலாபத்தினை அடைய முனைந்து கொண்டிருப்பதாகவும் சர்வாதிகாரம் கொண்டு மக்கள் உரிமைகளை மடக்க முனைவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, பேராதெனிய, மொரட்டுவ, களனி மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், புத்திஜீவிகள் இதில் ஒப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment