ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி, தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லையென தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
இதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதிலும் அது சாத்தியப்படவில்லையென பொலிசார் ஊடக அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளனர்.
இதுவரை, 35 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிசாத் குடும்பத்தினர் நாளை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Hasbunallah... Truth will prevail and be victorious.. And Falsehood is bound to perish... Hasbunallah...
Post a Comment