சமுர்தியை விட 'பயனுள்ள' திட்டம் வேண்டும்: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Friday 2 July 2021

சமுர்தியை விட 'பயனுள்ள' திட்டம் வேண்டும்: பிரதமர்

 


1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்தி திட்டம் எதிர்பார்த்த பயனைத் தரவில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. 


27 வருடங்களுக்கு முன் சமுர்தி உதவிகளைப் பெற்றவர்கள் இன்னும் அதனைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என தெரிவிக்கின்ற அவர், இதற்கு மாற்றீடாக மக்களுக்கு வருவாயைப் பெற்றுத் தரக் கூடிய திட்டங்கள் அவசியப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


இப்பின்னணியில், கிராம மட்டங்களில் தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்க அரசு செயற்பட்டு வருவதாகவும் சௌபாக்யா அதில் ஒரு அங்கம் எனவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment