முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்து, தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி இன்று மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மலையகத்தைச் சேர்ந்த குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பாகவே குறித்த வீட்டில் இணைந்ததாகவும் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவருக்கு 16 வயது என சிங்கள ஊடகங்களில் பரவலாக தெரிவிக்கப்படுவதுடன் சம்பவத்தின் பின்னணியில் வீட்டிலிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு வீடும் பரிசோதிக்கப்பட்டதாக பொரளை பொலிசாரை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இன்றைய தினம் தம்மை வீடுகளில் தடுத்து வைக்குமாறு ரிசாத் மற்றும் சகோதரன் தரப்பில் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment