வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்து, தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போன 16 வயது சிறுமி விவகாரம் தொடர்பில் இதுவரை ரிசாத் பதியுதீனின் வீட்டில் யாரும் கைது செய்யப்படாதமை கவலையளிப்பதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த.
குறித்த விவகாரம் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள நிலையில் இன்று ரிசாதின் மனைவியிடம் விசாரணை இடம்பெற்றுள்ளதுடன் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தவிரவும் இவ்விடயத்தில் சட்ட ஆலோசனை வழங்குவதற்கு பிரதி சட்டமா அதிபர் திலீபா பீரிஸ் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இறந்த சிறுமியின் குடும்பத்தினர் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அரசியல் அரங்கில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment