இந்த அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆறு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன.
இதில் பெரும்பாலானோர் பௌத்தர்கள் எனவும் தெரிவிக்கின்ற அவர், பெருமளவு வர்த்தகர்களும் உள்ளடக்கம் என தெரிவிக்கிறார்.
ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்கி மக்கள் நகர்வதற்கு முனைவதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும் அடுத்த வருடம் நாடு பாரிய பொருளாதார சிக்கலில் விழப்போவதாக ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment