அமெரிக்காவிலிருந்து 1.5 மில்லியன் தடுப்பூசி வரவு! - sonakar.com

Post Top Ad

Friday 16 July 2021

அமெரிக்காவிலிருந்து 1.5 மில்லியன் தடுப்பூசி வரவு!

 அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ள 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளன.


கோவக்ஸ் தடுப்பூசி பகிர்ந்தளிப்பு திட்டத்தின் கீழ் அமெரிக்கா பகிர்ந்து கொள்வதாக வாக்களித்திருந்த தடுப்பூசிகளே இவ்வாறு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


கட்டார் எயார்வேஸ் விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசுக்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment