தடையை மீறி கொழும்பு பயணம்; பேருந்து முடக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday 1 July 2021

தடையை மீறி கொழும்பு பயணம்; பேருந்து முடக்கம்

 


மாகாணங்களுக்கிடையிலான பிரயாண கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பிலிருந்து 38 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து முடக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சாரதி, நடாத்துனர் உட்பட 38 பேர் பேருந்தில் இருந்ததாகவும் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, நேற்றும் நானூறுக்கு மேற்பட்டோர் கொரோனா விதி முறைகளை மீறியதன் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment