ரிசாத் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்களை தேடும் பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Thursday 29 July 2021

ரிசாத் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்களை தேடும் பொலிஸ்

 


2010 முதல் 2021 வரையான காலப்பகுதியில் ரிசாத் பதியுதீன் வீட்டில் 11 பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக இருந்துள்ளதாகவும் அனைவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இதில் அண்மையில் உயிரிழந்த பெண்ணும் உள்ளடங்குகின்ற நிலையில் தற்சமயம் ஐவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 


நாளை வெள்ளிக்கிழமை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இஷாலினியின் பிரேதம் மீண்டும் தொண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment