மிக அவசியமான பிரயாணங்களன்றி தவிர்க்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்துள்ளது ஐக்கிய இராச்சியம்.
இவ்வாறு சிவப்பு பட்டியலில் இணைக்கப்படும் நாடுகளுக்குச் சென்று திரும்புவோர், கட்டாயம் 10 நாட்கள் அரச அனுமதியுடன் இயங்கும் ஹோட்டல்களில் தனிமைப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இலங்கையின் தற்போதைய சூழலைக் கருத்திற் கெர்ணடு அமெரிக்காவும் இவ்வாறு இலங்கைக்கு பிரயாணம் செய்வதைத் தவிர்க்கும்படி தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அண்மைக்காலமாக இலங்கையில் தினசரி 2500க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment