ரணில் தான் MP: தே. ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 June 2021

ரணில் தான் MP: தே. ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

 


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றம் செல்வார் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல அனுமதிப்பதில்லையெனும் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை இத்துடன் முடிவுக்கு வருகிறது.


இதேவேளை, ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை உருவாகியுள்ள பின்னணியில் ரணில் நாடாளுமன்றம் நுழையவுள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் தொடர்ச்சியான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment