மஹிந்தவின் மனைவி மரு மக்கள் தான் பாக்கி: JVP - sonakar.com

Post Top Ad

Wednesday 30 June 2021

மஹிந்தவின் மனைவி மரு மக்கள் தான் பாக்கி: JVP

 


மூன்றிலிரண்டு பெரும்பான்மையில்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றார்கள், பின் 20ம் திருத்தச் சட்டம் இல்லாமல் முடியாது என்றார்கள், தற்போது பசில் ராஜபக்ச இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு அரசாங்கம் சென்றுள்ளது.


இனி, மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மரு மக்களுக்கும் அமைச்சுப் பதவி கொடுத்தால் தான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென்கிறார் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ.


ஜுலை முற்பகுதியில் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர் அதிகாரத்துக்க வந்த பின்னரே பொருளாதாரம் சீராகும் என பெரமுன தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பிலேயே நலிந்த இவ்வாறு கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment