இலங்கையில் சீன இராணுவம் இல்லை: பா. அமைச்சு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 June 2021

இலங்கையில் சீன இராணுவம் இல்லை: பா. அமைச்சு!

 


இலங்கையில் பல்வேறு இடங்களில் சீனா பொறுப்பேற்றுள்ள அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அண்மையில் திஸ்ஸ வெ வ பகுதியில் சீன இராணுவ உடைக்கு நிகரான ஆடையணிந்த நபர்கள் காணப்பட்டிருந்தமை சர்ச்சையை உருவாக்கியிருந்தது.


இதற்கு பதிலளித்திருந்த சீன தூதரகம் அந்த உடைகள் சாதாரணமாக விற்பனைக்கு இருப்பதாகவும் குறித்த நிறுவனம் அதனை கொள்வனவு செய்து ஊழியர்களுக்குக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.


எனினும், அது இராணுவ சீருடைக்கு நிகராக இருப்பது இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கும் விடயம் என கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில் இது குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று விளக்கமளித்துள்ளதுடன் அங்கு காணப்பட்டவர்கள் சீன இராணுவத்தினர் இல்லையென தெரிவிக்கிறது.


இதேவேளை, சீன நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு இவ்வாறான சீருடைகளை வழங்காதிருக்கு நடவடிக்கை எடுக்குமாறு சீன தூதரகம் வேண்டப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment