மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு 14 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விளக்கமளித்துள்ளது அரசாங்கம்.
அங்கிருந்து வருபவர்களுள் பெரும்பான்மையானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை என விளக்கமளித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வரும் போது 'நெகடிவ்' சான்றிதழுடன் வருகின்ற போதிலும் இங்கு நடாத்தப்படும் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதாகவும் இதனால் எச்சரிக்கை நடவடிக்கையாகவே இரு வார தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment