பசில் இருந்தால் எரிபொருள் விலை உயர்ந்திருக்காது: லன்சா - sonakar.com

Post Top Ad

Monday 14 June 2021

பசில் இருந்தால் எரிபொருள் விலை உயர்ந்திருக்காது: லன்சா

 


பசில் ராஜபக்ச இருந்திருந்தால் தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு இடமளித்திருக்க மாட்டார் என்கிறார் நிமல் லன்சா.


இந்நேரம் தலையிட்டு, எரிபொருள் விலையுயர்வை பசில் தடுத்திருப்பார் எனவும் தெரிவிக்கின்ற லன்சா, விடய அமைச்சர் இதற்கான ஆவன செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.


எனினும், பிரதமர் - ஜனாதிபதி மற்றும் அவரது வியத்மக ஆலோசகர்கள் இவ்விடயத்தில் திடமாக இருப்பதுடன் விலையுயர்வு விடயத்தில் அமைச்சருக்கு எதுவித கட்டுப்பாடும் இருக்கவில்லையெனவும் அவரது தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment