பெரமுன செயலாளரின் 'வாயடைப்பு' - sonakar.com

Post Top Ad

Monday 14 June 2021

பெரமுன செயலாளரின் 'வாயடைப்பு'உதய கம்மன்பில - பெரமுனவின் வியத்மக மற்றும் பசில் ராஜபக்ச அணிகளுக்கிடையிலான பனிப்போர் வலுத்து வருகிறது. இந்நிலையில் எரிபொருள் விலையுயர்வின் பின்னணியில் கம்மன்பிலவை பதவி விலகுமாறு கோரிய பெரமுனவின் செயலாளர் இன்றைய தினம் கம்மன்பிலவுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தத் திட்டமிட்டிருந்தார்.


 எனினும், கட்சியின் உயர் மட்ட அழுத்தத்தின் நிமித்தம் செயலாளர் காரியவசம் மௌனம் காக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகுpறது.


எரிபொருள் விலையுயர்வு அரசாங்கத்தின் கூட்டு முடிவென நேற்றைய தினம் அறிவித்திருந்த கம்மன்பில, காரியவசத்தினை பகிரங்க விவாதத்திற்றும் அழைத்திருந்தார். எனினும், பொதுத்தளத்தில் இச்சர்ச்சை தொடராமல் இருப்பதற்கான முயற்சிகளை கட்சி உயர் மட்டம் மேற்கொண்டுள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment