நாட்டு மக்களின் 'கவலை' தீர்ந்துள்ளது: நாமல் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday 24 June 2021

நாட்டு மக்களின் 'கவலை' தீர்ந்துள்ளது: நாமல் விளக்கம்!

 


துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுவித்துள்ளமை நாட்டு மக்களின் பாரிய கவலையைத் தீர்த்துள்ளது என்கிறார் நாமல் ராஜபக்ச.


கடந்த ஆட்சியில் துமிந்தவுக்கு அநீதியிழைக்கப்பட்டிருந்தமை ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் ஊடாக தெளிவாகியிருந்ததாகவும் இந்நிலையில் நாட்டு மக்கள் இது தொடர்பில் பாரிய அளவில் கவலை கொண்டிருந்ததாகவும், இன்று அந்த கவலை தீர்ந்துள்ளதாகவும் நாமல் விளக்கமளித்துள்ளார்.


நீதித்துறையில் முறைகேடுகள் இருப்பதாக விமர்சித்ததன் பின்னணியில் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளமை நினைவூட்டத்தக்கது.


No comments:

Post a Comment