அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ச ஜுலை முற்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்கு ஏதுவாக இராஜினாமா 'பேரம்' நடந்து வருவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவர் முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, அதன் பின்னர் பிரதமர் பதவியை அபகரித்துக் கொள்வார் என எச்சரித்துள்ளார் மெடில்லே பன்னாலோக தேரர்.
2025 தேர்தலை திசை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் பசில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் உண்மையான தேசப்பற்றுள்ளவராக இருந்தால் தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிட வேண்டும் எனவும் தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment