நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்: திலும் - sonakar.com

Post Top Ad

Thursday 17 June 2021

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்போம்: திலும்

 


உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமகி ஜன பல வேகய கொண்டு வர முனையும் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என தெரிவிக்கிறார் திலும் அமுனுகம.


அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையென்பது அரசுக்கு எதிரானது எனவும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவ்வாறு கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு கேலிக் கூத்து எனவும் அவர் தெரிவிக்கிறார்.


இதேவேளை, கம்மன்பிலவை விலகுமாறு தான் கோரிக்கை விடுத்த நிலைப்பாட்டில் மாற்றமில்லையென பெரமுன செயலாளர் சாகர காரியவசம் நேற்று மாலையும் தெரிவித்திருந்தமையும் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரத்தில் பிரேரணைக்கு ஆதரவளிக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment