போக்குவரத்து தடையை நீடிக்க கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday 6 June 2021

போக்குவரத்து தடையை நீடிக்க கோரிக்கை

 


தற்போது அமுலில் இருக்கும் நாடளாவிய ரீதியிலான போக்குவரத்து தடையினை ஜுன் 14ம் திகதி நீக்குவது ஆரோக்கியமான முடிவில்லையென தெரிவிக்கிறார் சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உப்புல் ரோஹன.


நாட்டில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் மக்கள் நடமாட்டம் அதே போன்று இருப்பதாகவும் தற்சமயம் உள்ள தீவிர நிலைமையைக் கட்டுப்படுத்த மேலும் கால அவகாசம் தேவையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


தற்சமயம் 34,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் அண்மைய மரணங்களில் பெரும்பாலானவை இவ்வாறு வீடுகளில் தங்க வைக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் எனவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment