மேலும் 10 லட்சம் சீன தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஒரு மாத காலத்தில் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் 10 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
இதுவே ஒரே தடவையில் இலங்கை கொள்வனவு செய்துள்ள பாரிய தொகை தடுப்பூசிகளாகும்.
No comments:
Post a Comment