ரிசாதின் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி நவாஸ் விலகல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 June 2021

ரிசாதின் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி நவாஸ் விலகல்

  


ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கு விசாரணையிலிருந்து மூன்றாவது நீதிபதி விலகிக் கொண்டுள்ளார்.


தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இன்றைய தினம் நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் யசந்த கொடகொட ஆகியோர் இவ்வாறு விலகியிருந்தனர்.


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரிசாத் மற்றும் அவரது சகோதரன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment