பிரதமரின் ஒப்புதலிலேயே எரிபொருள் விலையுயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday 13 June 2021

பிரதமரின் ஒப்புதலிலேயே எரிபொருள் விலையுயர்வு

 


நிதியமைச்சர் என்கிற வகையில் பிரதமரின் ஒப்புதலிலேயே அண்மைய எரிபொருள் விலையுயர்வு நிகழ்ந்துள்ளதாக கம்மன்பிலவின் சகாவான விமல் வீரவன்ச தரப்பு விளக்கம் வெளியிட்டுள்ளது.


வலுசக்தி அமைச்சருக்கு எரிபொருள் விலையுயர்த்தும் அதிகாரம் இல்லையெனவும் அதற்கான இறுதித் தீர்மானம் மற்றும் ஒப்பம் நிதியமைச்சருக்குரியது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


எனினும், கம்மன்பில தன்னிச்சையாக இவ்வாறு தீர்மானித்ததாகக் கூறி ஆளுங்கட்சியான பெரமுன அவரை இராஜினாமா செய்யுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment