எத்தியோப்பியாவுடன் உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Wednesday 9 June 2021

எத்தியோப்பியாவுடன் உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை

 


இலங்கை - எத்தியோப்பியா இடையே இரு தரப்பு கூட்டுறவு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான உடன்படிக்கை மேற்கொள்வது குறித்து முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.


இலங்கை வெளியுறவுத்துறைக்கும் - எத்தியோப்பிய வெளியுறவுத்துறையின் ஆசிய விவகாரப் பிரிவுக்குமிடையில் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டலில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.


ஆபிரிக்க நாடுகளுடன் 'உறவை' வளர்த்துக்கொள்ள இலங்கை முன்னெடுப்புகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்ற அதேவேளை, ஏலவே ஆபிரிக்க பிராந்தியத்தில் சீன தலையீடு அதிகரிப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment