12.5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலின்டர்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு அதனை விற்பனை செய்வதற்கு வர்த்தகர்கள் மறுப்பதற்கு எதிராக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பல இடங்களில் வர்த்தகர்கள் எடை குறைந்த சிலின்டர்களை விற்பனை செய்வது மற்றும் 12.5 கிலோ எடையுள்ள சிலின்டர்களை விற்பனை செய்ய மறுப்பது குறித்த முறைப்பாடுகளின் பின்னணியில் நுகர்வோர் அதிகார சபை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்பின்னணியில் வர்த்தகர்கள் குறித்த வகை சிலின்டர்களை விற்பனை செய்ய மறுப்பது குற்றமாகும்.
No comments:
Post a Comment