நாளை கூடுகிறது 'நாடாளுமன்றம்' - sonakar.com

Post Top Ad

Monday 7 June 2021

நாளை கூடுகிறது 'நாடாளுமன்றம்'

 நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுக்கு கட்சித் தலைவர்கள் மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பின்னணியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


இன்றைய தினம் காலையில் கட்சித் தலைவர்கள் கூடிக் கலந்துரையாடியதன் பின்னணியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தரப்பு விளக்கமளித்துள்ளது.


நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும் செயற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment