நௌபர் - சஹ்ரானுக்கு 'மேல்' வேறு கைகள்: ச.மா அதிபர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 May 2021

நௌபர் - சஹ்ரானுக்கு 'மேல்' வேறு கைகள்: ச.மா அதிபர்!

 


ஈஸ்டர் தாக்குதல் நடக்கப் போகும் இடம், நேரம் குறித்து அரச புலனாய்வுத் துறைக்கு துல்லியமான தகவல்கள் வந்தடைந்தமை சாதாரண விடயமன்று எனவும் இதில் பாரிய சூழ்ச்சி இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஓய்வு பெறப்போகும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா.


சஹ்ரான், இயக்கப்பட்ட ஒரு தாக்குதல்தாரிதான் எனவும் நௌபர் மௌலவி என அறியப்படும் நபரே பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கு மேல் வேறு கைகள் தொடர்புபட்டிருப்பதாகவும் இவையனைத்தும் தகுந்த முறையில் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


700க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அதில் ஐந்து தொடர்பிலேயே இதுவரை விசாரணைகள் முடிவுற்றுள்ளதாக குற்றவியல் விசாரணைப் பிரிவினர் அண்மையில் சட்டமா அதிபருக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment