ரிசாதிடம் முறையான விசாரணையில்லை: ருஷ்தி - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

ரிசாதிடம் முறையான விசாரணையில்லை: ருஷ்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். 


மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணைகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று சந்தித்த பின்னரேயே, அவர் ஊடகவியலாளரிடம் இதனை தெரிவித்தார்.


 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக மாநாடு, இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், செயலாளர் சுபைர்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment