நேற்றைய தினம் இலங்கையில் 2700க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் கம்பஹா மாவட்டத்திலிருந்து 558 பேர் இதில் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே தொடர்ந்து அதிக தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். கொழும்பு மாவட்டத்திலிருந்து நேற்று 522 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்சமயம், 27456 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிக் குறைபாடுகளினால் வீடுகளில் தங்க வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment