பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுனர் அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னணியில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆபத்தான நிலையில் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையனெவும் அவரது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் எனவும் அவரது குடும்பம் சார்பில் ஏலவே நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment