தடுப்பூசி இல்லாவிட்டால் பஸ் சேவை நிறுத்த எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 9 May 2021

demo-image

தடுப்பூசி இல்லாவிட்டால் பஸ் சேவை நிறுத்த எச்சரிக்கை

 

OfVdW9c

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரம் பஸ் சேவைகளை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்.


அரசிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தும் இது வரை சாதகமான பதில் கிடைக்கவில்லையெனவும் பேருந்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அச்சங்கம் தெரிவிக்கிறது.


தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 45,000 ஊழியர்களுக்கு அவசரமாக தடுப்பூசிகளை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment