இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது. இன்றைய தினம் 15 பேரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 20657 பேர் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை இதுவரை 104463 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 931396 பேர் இதுவரை முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment