பட்டம் விட்ட மூவர் கூரையிலிருந்து விழுந்து மரணம் - sonakar.com

Post Top Ad

Friday 14 May 2021

பட்டம் விட்ட மூவர் கூரையிலிருந்து விழுந்து மரணம்

 


காலி, மூன்று மாடி வீடொன்றின் கூரைப்பகுதியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த மூவர் மரணித்த சோகம் இடம்பெற்றுள்ளது.


மூன்றாவது மாடியில் கூரைப்பகுதியில் ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் (46) , ஆறு வயது குழந்தை மற்றும் 44 வயது அயல் வீட்டுக்காரர் ஆகியோரே இவ்வாறு அஸ்பெஸ்டஸ் கூரை சரிந்ததனால் விழுந்து மரணித்துள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.


மேலும் ஒரு குழந்தை சம்பவத்தில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment