கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசனை - sonakar.com

Post Top Ad

Saturday, 22 May 2021

கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசனை

 வார இறுதியில் அமுலுக்கு வந்துள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டினை தொடர்ச்சியாக 14 தினங்களுக்கு அமுல் படுத்துமாறு மருத்துவ சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இது குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.


நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


நாட்டை முழுமையாக முடக்குவதில் அரசாங்கம் ஆர்வமற்றுள்ள போதிலும் ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலேயே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 25, 26 அல்லது 27ம் திகதிக்குள் ஜனாதிபதியுடன் ஆலோசித்து 28ம் திகதிக்குப் பின்னரான நடவடிக்கை குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment