கொழும்பு துறைமுக நகர பொருளாதார விவகாரம் தொடர்பிலான சட்டமூலத்தின் மீதான வாதம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் அப்பகுதியை தனி நாடு போன்றாக்கி சீனாவிடம் ஒப்படைப்பதாகி விடுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வரும் அதேவேளை சட்டமூலத்தின் சில அம்சங்கள் யாப்புக்கு முரணாக இருப்பதாக நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சட்டமூலத்தில் சில மாற்றங்களை அரசு அறிவித்துள்ளதுடன் அங்கு உருவாக்கப்படும் தொழில்வாய்ப்பில் 75 வீதத்தினை இலங்கையருக்கே வழங்க வேண்டும் என்ற விதியையும் பிரதமர் மஹிந்த தற்போதைய சலசலப்பின் பின் முன் மொழிந்துள்ளார். எனினும், துறைமுக நகரம் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்காது என தொடர்ச்சியான சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment