இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத்தை தடுக்கும் அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Monday 17 May 2021

இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத்தை தடுக்கும் அமெரிக்கா!

 


ஐ.நா பாதுகாப்பு சபையில் இஸ்ரேலை கண்டித்து, யுத்த நிறுத்தத்தைக் கோரும் வகையிலான அறிக்கையை மூன்றாவது தடவையாக தனது வீட்டோ அதிகாரம் ஊடாக இரத்து செய்துள்ளது அமெரிக்கா.


பலஸ்தீனர்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னரே தாம் தாக்குதல் நடாத்தியதாக ஹமாஸ் தெரிவிக்கின்ற அதேவேளை, ஹமாஸின் தாக்குதலுக்கே தாம் பதிலடி வழங்குவதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.


கடந்த 8 தினங்களில் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 10 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள அதேவேளை இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். எனினும், தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தி வரும் அதேவேளை, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டனமும் வீட்டோ செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment