சீரற்ற கால நிலை: 3 மரணங்கள்; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 15 May 2021

சீரற்ற கால நிலை: 3 மரணங்கள்; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

 


மேல், தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் சுமார் 2750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.


இப்பின்னணியில் சுமார் 11,542 பேரளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காலி - நாகொட மற்றும் வரகாபொல பகுதிகளில் மொத்தமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை சுமார் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.


தொடர்ந்தும் காலநிலை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment