அரசாங்கம் தமது பலவீனத்தை மறைக்க பல்வேறு கைதுகளை நடாத்தி மக்களை முட்டாளாக்க முனைந்து கொண்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
அண்மையில் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் மேலும் பல புதிய கைதுகள் ஊடாக அரசாங்கம் மக்களை முட்டாளாக்கும் எதோச்சாதிகாரத் திட்டத்தையே முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் அரசியல் டீல்கள் காரணமாகவே விசாரணைகள் நேர்மையாக நடைபெறவில்லையெனவும் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்து வந்த நிலையில் பல்வேறு கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment