நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலை சென்று நலம் விசாரித்துள்ளார் நாமல் ராஜபக்ச.
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறி போயுள்ள நிலையில், அதற்குப் பகரமாக தான் ஒரு அரசியல் முடிவை எடுக்கப் போவதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.
பெரும்பாலும், தான் பெற்றுக் கொண்ட தேசியப் பட்டியல் நியமனத்தை அவர் விட்டுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஞ்சனோடு நல்லுறவைப் பேணி வரும் நாமல் ராஜபக்ச நேரடியாகச் சென்று நலம் விசாரித்து, நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment