ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புகள்: சிக்கலில் பிரதமர்! - sonakar.com

Post Top Ad

Saturday 17 April 2021

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புகள்: சிக்கலில் பிரதமர்!

 


மஹிந்த ராஜபக்சவை ஆட்சிபீடமேற்றுவதற்குத் தளமமைத்து இயங்கிய அபேராம விகாரையில் தற்போது அரசாங்கத்தை வெகுவாக விமர்சிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நேரடியாகவே தொலைபேசி ஊடாக ஆனந்த தேரருடன் பேசியுள்ளார்.


அங்கு நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்து விஜேதாச ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பேச்சுக்கள் ஆனந்த தேரரை வருத்தத்துக்குள்ளாக்கியுள்ள நிலையில் இது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், புது வருட கொண்டாட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை சென்றிருந்த பிரதமர் அவசரமாக கொழும்பு திரும்பி இவ்விவகாரத்தை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஒரு நாட்டின் தலைவர் பேசக்கூடிய 'முறையில்' பேசத் தவறிய ஜனாதிபதிக்கு தானும் அவ்வாறே அதே வகையில் பதிலளித்ததாகவும் எது குறித்தும் அச்சப்படப் போவதில்லையெனவும் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமையும் அவருக்கும் ஜனாதிபதி நேரடியாக தொலைபேசி அழைப்பெடுத்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment