மேல் மாகாணத்தில் 'தஹம்' பாடசாலைகள் மீள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday 18 April 2021

மேல் மாகாணத்தில் 'தஹம்' பாடசாலைகள் மீள் ஆரம்பம்

 ஞாயிறு தினங்களில் பௌத்த சிறுவர்களுக்காக நடாத்தப்படும் தஹம் பாடசாலைகள் மேல் மாகாணத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


ஏழு மாத காலத்திற்குப் பின்னர் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை அனைத்து இளைஞர்களும் வாரம் ஒரு முறையாவது விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான கட்டாய நடைமுறை அவசியப்படுவதாக அண்மையில் பிரதமர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


இதேவேளை, இலங்கையில் மூன்றாவது கொரோனா அலை உருவாகக் கூடும் எனும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment