போலி 'பிக்குவை' தேடி பொலிஸ் வேட்டை - sonakar.com

Post Top Ad

Sunday 18 April 2021

போலி 'பிக்குவை' தேடி பொலிஸ் வேட்டை

 


அநுரராதபுரம், மீகலேவ பகுதி விகாரைக்குள் புகுந்து சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.


பௌத்த பிக்கு போன்று விகாரைக்குள் நுழைந்து, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட குறித்த நபரை விகாராதிபதி கேள்விக்குட்படுத்தியதையடுத்து சந்தேக நபர் காட்டுப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரதேசவாசிகளும் பொலிசாரும் இணைந்து தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment