ரிசாத் கைது; நிந்தவூர் பிரதேச சபையில் கண்டனம் - sonakar.com

Post Top Ad

Friday 30 April 2021

ரிசாத் கைது; நிந்தவூர் பிரதேச சபையில் கண்டனம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச  சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  உறுப்பினர்கள்  சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை  அணிந்து சமூகமளித்திருந்ததுடன் தொடர்ந்து சபையில் ஏகமனதாக  கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச  சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின்  37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை   நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்  தலைமையில் நடைபெற்றது.


இதன்போது,   தவிசாளர்  உட்பட சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.அஸ்பர்இ  அப்துல் வாஹிது    ஆகியோர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து உரை யாற்றியதுடன் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான றியாஸ் ஆதம், ஏ.அன்சார் உள்ளிட்டவர்களும் கைது கண்டன உரை நிகழ்த்தினர்.


இதன் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் கைது தொடர்பில் சபையில் ஏகமனதாக கண்டனத்தீர்மானமும் எடுக்கப்பட்டதேடு அவரது விடுதலையை வலியுறுத்தி கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


-M A M Mursith

No comments:

Post a Comment