அதிகாலை வேளையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டமை ஜனநாயக விரோதம் என தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.
சிங்கள மக்களை வேறு வகையில் சிந்திக்க வைத்து தேர்தல் வெற்றியை அடிப்படையாக வைத்து அரசு செய்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகள், நடைமுறையரசின் மீதான நம்பிக்கையை முற்றாக இழக்கச் செய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீன், அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் கைதுகள் இதனையே எடுத்தியம்புவதாகவும் விசாரணைகளுக்கு ஒத்துழைத்தவர்களை மீண்டும் கைது செய்து நாடகமாடுவதாகவும் ஹக்கீம் அரசை சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment