ரிசாதை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 April 2021

ரிசாதை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க முஸ்தீபு

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.


ஈஸ்டர் தாக்குதல்தாரியான இல்ஹாமுக்கு சட்டவிரோதமான முறையில் செப்புக் கம்பிகளை வழங்கியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டினை மேலும் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் இருவருக்கும் தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததாக பொலிசார் அண்மையில் தெரிவித்திருந்த அதேவேளை, தனது கை சுத்தமானது எனவும் தாம் எதுவித குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லையென ரிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment