அசோக அபேசிங்கவிடம் CID விசாரணை - sonakar.com

Post Top Ad

Thursday 11 March 2021

அசோக அபேசிங்கவிடம் CID விசாரணை

 


ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் கோட்டாபே மற்றும் பசில் ராஜபக்ச என அண்மையில் பரபரப்பு கருத்து வெளியிட்ட சமகி ஜனபலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளனர் குற்றப்புலனாய்வு பிரிவினர்.


இப்பின்னணியில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அங்கு பிரசன்னமாகி விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார் அபேசிங்க.


இதன் போது கருத்து தெரிவித்த சஜித், தாக்குதல் சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொணர்வது அரசின் கடமையெனவும், நீதியை நிலை நாட்டுவதே உறவினர்களை இழந்த குடும்பங்களுக்குத் தரும் பயனுள்ள தீர்வு எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment