இன்று முதல் ஜனாஸா அடக்க பணிகள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Friday 5 March 2021

இன்று முதல் ஜனாஸா அடக்க பணிகள் ஆரம்பம்

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில் இன்று முதல் அதற்கான பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரணை தீவு மாத்திரமே வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாணத்தில், ஓட்டமாவடி பிரதேசத்தில் இதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுகிறது.


ஆகக்குறைந்தது இரண்டு ஜனாஸாக்கள் அப்பகுதியில் அடக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment