ஆணைக்குழு அறிக்கை: சிரேஷ்ட சட்டத்தரணிகள் 'கவலை' - sonakar.com

Post Top Ad

Friday 5 March 2021

ஆணைக்குழு அறிக்கை: சிரேஷ்ட சட்டத்தரணிகள் 'கவலை'

 


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில் அது குறித்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.


அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட முழுமையா பிரதியினை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் சங்க செயலாளருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள பகுதிகள் நீதித்துறையை அவமதிப்பதோடு கேள்விக்குட்படுத்தும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழு நீதிமன்றமாக செயற்பட முடியாது என லக்ஷ்மன் கிரியல்ல விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment