மாகாண சபைகளுக்கும் 'ஒரே சட்டம்': சரத் - sonakar.com

Post Top Ad

Sunday, 14 March 2021

மாகாண சபைகளுக்கும் 'ஒரே சட்டம்': சரத்மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கான தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லையென தெரிவிக்கும் அமைச்சர் சரத் வீரசேகர, மாகாணங்களுக்கு பிரத்யேக சட்டங்கள் இருக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார்.


ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற அடிப்படையில் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே சட்டமே இருக்க வேண்டும் எனவும் இவ்விடயத்தினை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.


புதிய அரசியலமைப்பில் இவையனைத்துக்கும் தீர்வைக் கண்ட பின்னரே மேலதிக நடவடிக்கைகள் திட்டமிடப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment